ஆரூரும் இடைத்தேர்தலும்
20 தொகுதிகளுக்கு
இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ள சூழ்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் ஏன் திடீர்
இடைத்தேர்தல்? என்ற கேள்வியைக் கேட்காத திருவாரூர் மாவட்ட மக்களே இல்லை எனலாம்.
பலரும் பலவிதமாக
விவாதிக்கத் தொடங்கி இருந்தார்கள்.
அரசியல் கட்சிகள்
சின்னங்களை சுவர்கள் தோறும் வரைந்து தள்ளி விட்டார்கள்.
பிரதான கட்சிகள்
வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார்கள்.
தேர்தலில்
யார் வெல்வார்கள் என்ற கருத்துக் கணிப்பும் டீக்கடைகளில் தொடங்கி விட்டது.
அதே நேரத்தில்
இறுதியில் பணப்புழக்கத்தைக் காரணம் காட்டி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சும்
அடிபட்டது. ஆனால் அறிவித்த சில நாட்களிலே தேர்தல் ரத்து செய்யப்பட்டது யாரும் எதிர்பாராத
ஒன்று.
புயலின் பாதிப்பிலிருந்து
திருவாரூர் மாவட்டம் இன்னும் முழுமையாக மீண்டெழவில்லை என்பது உண்மை.
நிவாரணங்களுக்கானப்
போராட்டங்கள் அங்காங்கே நடந்து கொண்டிருப்பதைப் பத்திரிகையில் வரும் செய்திகள் காட்டிக்
கொண்டிருக்கின்றன.
இடைத்தேர்தல்
அறிவிப்பும், ரத்தும் திருவாரூரை ஒரு வகையில் இந்திய அளவில் கவனம் பெறச் செய்திருக்கிறது.
*****
No comments:
Post a Comment