7 Jan 2019

கொண்டாட்டங்கள் குப்பைகளாகி விட்டன.


எழுத்தை மட்டும் நம்பி ஜீவித்து விட முடியாது.
அன்று போல் இன்று பிரசுரத்துக்காகப் போராடும் நிலை இல்லை. ப்ளாக் எழுதி யார் வேண்டுமானாலும் அடுத்த நொடியே பிரசுரித்து விடலாம்.
அதில் சுயமாக எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைந்து காப்பி, பேஸ்ட் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
கடைசியில் ப்ளாக்கில் வாசிப்பவர்கள் அருகிப் போய் ஒரு நாளைக்கு 20 பேர் வாசித்தால் அதிகம் என்பது போலாகி விட்டது.
*****
நம் கொண்டாட்டங்கள் அநேகமாக குப்பைகளாகி விட்டன.
ஒரு கல்யாண மண்டபத்துக்குப் போனால், அதன் வெளியே ஓர் ஓரத்தில் காலியான தண்ணீர் பாட்டில்கள் மலை போல குவிந்து கிடக்கின்றன.
தனக்குச் சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று மனிதன் பூமியை அசுத்தப்படுத்தியதுதான் மிச்சம்.
பிறந்த நாள், புது வருடப் பிறப்பு என்றால் வெடிகளை வெடித்து தெருவையே காகிதக் குப்பைகளால் சாலை போட்டதைப் போல மாற்றி விடுகிறார்கள்.
சாவு ஊர்வலமும் அந்தக் கொண்டாட்ட வரிசைகளில் மாறி விட்டது. குடித்து விட்டு பூக்களை ஏகத்துக்கும் விசிறியடித்து, காதைக் கிழித்துத் தொங்கவிடும் வெடிகளை வெடிக்க வைத்து உயிரோடு இருப்பவர்களைச் சாகடித்து விடும் அளவுக்கு ரணகளம் செய்து விடுகிறார்கள்.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...