6 Jan 2019

பிரபஞ்சன் ஹீரோ ஆகி இருந்தால்...


'பாரதிக்கு, புதுமைபித்தனுக்கு நேர்ந்ததை விட எனக்கு மோசமாக நடந்து விடவில்லை' என்ற பிரபஞ்சனின் வாசகத்தைப் படித்து இருப்பீர்கள்.
பிரபஞ்சனுக்கு என்று தீவிர வாசகர்கள் அவர் காலத்திலேயே இருந்தார்கள், இருக்கிறார்கள்.
அதில் ஒரு தீவிர வாசகர் 'குமுதம் போன்ற சாக்கடையில் நீங்கள் எழுதலாமா?' என்ற கேட்க, 'குமுதம் ஒரு சாக்கடைதான், அதில் எழுதும் என் எழுத்து சாக்கடையா? என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும்' என்று பிரபஞ்சன் பதில் அளிக்க, அதன் பின் என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
பிரபஞ்சன் ஒரு எழுத்தாளாராக சென்னையில் நிறைய நாட்களைக் கழித்திருக்கிறார். அவர் சென்னைக்கு வந்ததே சினிமாவில் ஹீரோவாக நடிக்கத்தான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட போது ஆச்சரியமாக இருந்தது.
நடிகர் சிவகுமார் ஓவியராக வந்து நடிகராக ஆனவர். பிரபஞ்சனும் அப்படி ஆகி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை பல நேரங்கள் மனதுக்குள் ஓடுவதுண்டு. அவர் கமல் போன்ற ஒரு ஹீரோவாக இருந்திருப்பாரா? ரஜினி போன்ற ஒரு ஹீரோவாக இருந்திருப்பாரா? சத்தியராஜ் போலவா அல்லது இப்போதைய விஜய் சேதுபதி போலவா? எப்படி இருந்திருப்பார்? ஒருவேளை ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று கலந்து கட்டி அடித்திருப்பாரா?
எழுத்தாளர்களில் வேல ராமமூர்த்தியைப் பல படங்களில் வில்லனாகப் பார்த்து இருக்கிறேன். சாரு நிவேதிதாவையும் ஒரு படத்தின் பாடலில் ஆர்மோனியம் மீட்டுபவராகப் பார்த்திருக்கிறேன்.
என்ன இருந்தாலும் பிரபஞ்சன் ஹீரோ ஆகாமல் இருந்தது நல்லதாகத்தான் தோன்றுகிறது. ஆகியிருந்தால் ஒரு நல்ல தமிழ் எழுத்தாளரை இழந்திருப்போமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...