நான் பள்ளிப்
படித்த காலக்கட்டத்தில் சைக்கிளுக்கு ஒரு தனி கிரேஸ் இருந்தது. சைக்கிள் ரிப்பேர் செய்யும்
கடைகளுக்கு தனி மெளசு இருந்தது.
பழைய சைக்கிள்
என்றாலும் அதில் பந்தாவாகப் போவதில் தனி சுகம்.
இப்போதெல்லாம்
டூவீலர்கள் பறக்கின்றன.
அதில் நீங்கள்
வைத்து இருக்கும் டூவீலர் ஒரு ஆள் மட்டும் உட்காரும் அளவுக்கு இருக்க வேண்டும். பின்னால்
உட்கார்ந்திருப்பவரின் சீட் வானத்துக்கு எகிறி அடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டும்.
அந்த மாதிரி பைக்குகள்தான் இருக்க வேண்டும். சாதா பைக்குகள் வைத்திருந்தால் நீங்கள்
சோதாவாகக் கருதப்படுவீர்கள்.
சைக்கிள்கள்
சைக்கிள் கேப்பில் காணாமல் போய் விட்டன. மிதிவண்டியைப் போல சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத
ஒரு வாகனம் உண்டோ?
ஆளாளுக்கு
பைக்குகளையும், ஸ்கூட்டிகளையும் வாங்கிக் கொண்டு பறந்து கொண்டிருப்பதால் பொதுப்
போக்குவரத்து கேள்விக்குறியாகிக் கொண்டு இருக்கிறது. இப்போதெல்லாம் காலி சீட்டுகளோடு
பேருந்துகளைப் பார்க்க முடிகிறது. காலை, மாலை போன்ற அலுவலக நேரங்களில் மட்டுமே பேருந்துகள்
திணறிக் கொண்டு போகின்றன. மற்ற நேரங்களில் காற்று வாங்கிக் கொண்டுதான் போகின்றன.
மிதிவண்டியும்,
பொது போக்குவரத்தும் சுற்றுச்சூழலின் இரண்டு கண்கள். இந்த இரண்டையும் அதிகம் பயன்படுத்தும்
மக்கள் உள்ள தேசமே தூய்மை மேல் அக்கறை கொண்ட தேசம்.
சுற்றுச்சூழலை
நாம் மாற்றினால் அது நம்மை மாற்றுவதற்கு முன்பு போல் எல்லாம் நீண்ட காலம் எடுத்துக்
கொள்வதில்லை. பருவநிலை மாறுபாடுகள் என்று சில நாட்களிலேயே அடித்துத் துவைத்து காய
போட்டு விட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது.
*****
No comments:
Post a Comment