22 Jan 2019

ஜல்லிக்கட்டுக் கவசங்கள்


ஜல்லிக்கட்டுக் கவசங்கள்
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு.
அது தமிழர்களின் பாரம்பரியம்.
இனப்பெருக்கத்திற்கான சினை ஊசிகள் வந்த பின்னும் தமிழ்நாட்டில் இன்னும் காளைகள் இருக்கிறது என்றால் அதற்கு ஜல்லிக்கட்டும் ஒரு முக்கியக் காரணம்.
ஜல்லிக்கட்டுக்கான தமிழர்களின் உரிமையைப் போராடிப் பெற்றிருக்கிறோம்.
இத்தகைய ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு முறைகளில் அதிக கவனமும், அக்கறையும் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றாலும் ஜல்லிக்கட்டில் காயம் படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய காயங்கள் உயிரிழப்பை நோக்கியும் சென்று விடும் அபாயம் இருக்கிறது.
குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து கொள்வது போல,
கிரிக்கெட்டில் மட்டை பிடிப்பவர் பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து கொள்வது போல,
சில விளையாட்டுகளில் கோல் கீப்பர்கள் பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து கொள்வது போல,
இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்து கொள்வது போல,
நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து கொள்வது போல,
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் வீரர்களும் நெஞ்சுப் பகுதி, வயிற்றுப் பகுதி, கவுட்டிப் பகுதி, கண் மற்றும் தலைப்பகுதிக்கு உரிய பாதுகாப்பு கவசங்களை  ஏன் அணிந்து கொள்ளக் கூடாது?
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கானப் பாதுகாப்புக் கவசங்களை உருவாக்குவது குறித்து நாம் ஏன் சிந்திக்கக் கூடாது?
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...