2 Jan 2019

நம்பிக்கைதானே எல்லாம்


1. வாழ்க்கையின் சந்தேகங்கள் ஓய்ந்தபாடில்லை. திருவாரூர் தொகுதிக்கு முன்னர் திருப்பரங்குன்றம் தொகுதி காலியானது. திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறதே என்று மண்டையைப் பிய்த்துக் கொள்ளாத குறைதான். எது எப்போது நடக்க வேண்டுமோ அது அப்போதுதான் நடக்கும் போலிருக்கிறது. திருவாரூர், திருப்பரங்குன்றத்தையும் சேர்த்து மொத்தமாக இருபது சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். நம்பிக்கைதானே எல்லாம். கடைசியில் நகைக்கடை விளம்பரம்தான் ஆறுதலுக்கு கைகொடுக்கிறது.

2. வாழ்க்கையின் வேகத்தை நாம் அதிகரிக்க முடியாது. அப்படி அதிகரிக்க நினைத்தால் அது நம் இதயத்தின் வேகத்தை அதிகரித்து விடுகிறது.

3. மேற்கூறிய இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருப்பது போலத் தோன்றலாம். இரண்டு பத்திகளும் வாழ்க்கை என்று தொடங்குவதைத் தவிர வேறு தொடர்பு எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...