2 Jan 2019

உபதேச எண் - 1331


உபதேச எண் - 1331
திருமணம் செய்யாதவர்கள் பாக்கியவான்கள்
திருமணம் செய்தவர்கள் பாக்கியவான்கள்
அபாக்கியவான்கள் யாருமில்லை
வாய்க்கு ருசியாகச் சாப்பிடுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
ருசியாகச் சாப்பிட வாய்க்காதவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
துரதிர்ஷ்டசாலிகள் யாருமில்லை
மாமியார் மருமகள் சண்டைகளைப்
பெரிதாகக் கருதுவதற்கில்லை
போஷாக்காக இருப்பதை வைத்து
சண்டைகள் நிகழ்த்தப்படுகையில்
ருசியாக சாப்பிட வாய்க்காத
வத்தல்கள் செய்த அதிர்ஷ்டத்தை
வார்த்தைகளால் சொல்ல முடியாது என்றால்
உமது வார்த்தைகளைக் கொண்டே
உமது மனஇறுக்கங்கள் இறுகக் கட்டப்படுகிறது
உமது பேச்சைப் பயன்படுத்தியே
நீ பயமுறுத்தப்படுகிறாய்
உமது பேச்சை ஆயுதமாக்கியே
நீ மோசமாகத் தாக்கப்படுகிறாய்
மெளனம் போன்ற அருமையான மொழியுண்டா
பசி போன்ற ஆசான் யாருமுண்டா
கொஞ்சம் காத்திரு
ஏதேனும் மாறக் கூடும்
சில நேரங்களில் சூழ்நிலையே மாறி விடக் கூடும்
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...