2 Jan 2019

பிரமைதாசன்


பிரமைதாசன்
உனக்குப் பேசப் பிடிக்கும்
எனக்கு மெளனம் பிடிக்கும்
நீ பேசிக் கொண்டிருந்தாய்
நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்
நீ பேசியது மறந்து விட்டது
பேசுவது மட்டும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது
இப்போதும்
தூக்கத்திலிருந்து விழித்தெழும் போதும்
கையிலிருக்கும் தேநீர்க் கோப்பை நழுவி விழும் போதும்
மாடிப் படிகட்டுகளிலிருந்து தவறி விழும் போதும்
நடுச்சாலையின் மத்தியில் விபத்தில் சிக்கும் போதும்
அவசர ஊர்திகள் அடிக்கடி கடக்கும் போதும்
ஓடிச் சென்று பிடிக்க முடியாத பேருந்திலிருந்து
ஒரு குழந்தை டாட்டா காட்டும் போதும்
சர்க்கரை அளவு குறைந்து எங்காவது
மயங்கி விழும் போதும்
நீ பேசிக் கொண்டே இருக்கிறாய்
இறந்த பின்னும் பேசும்
அபூர்வ சக்தி படைத்தவள் நீ
செத்தப் பிணம் போல் இருந்து
காதுகளில் கீச்சிட்டுக் கொண்டிருக்கும்
அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பிரேமைதாசன் நான்
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...