பொறுமை காஸ்ட்லியான பண்பு
பொறுமையை
மிக நல்ல பண்பாக கூறுவதற்கு காரணம் இருக்கிறது.
அதில் உள்ள
மிக முக்கிய நல்ல ஒன்று என்னவென்றால்... பொறுமையாக இருக்கும் போது பல நல்ல வாய்ப்புகள்
கண்ணுக்குத் தெரியும் என்பதுதான்.
பல நேரங்களில்
நாம் பொறுமையாக இல்லாத காரணத்தாலே கண்ணுக்குத் தெரியும் நல்ல வாய்ப்புகளையும் தவற
விடுகிறோம்.
எப்படியும்
பொறுமையிழந்து டென்ஷன் ஆவதால், அந்த டென்ஷன் குறைவதற்கே மூன்று நாட்களுக்கு மேல் ஆகும்.
மூன்றே நிமிஷத்தில் எனக்கு டென்ஷன் குறைந்து விடும் என்று சொல்வதெல்லாம் கப்சா.
பொறுமையிழந்த
மனம் நிதானத்துக்கு வருவது அவ்வளவு சாமானியமான ஒன்றில்லை. பொறுமையிழப்பு என்பது இரத்த
ஓட்டம், நரம்பு மண்டலம் மற்றும் எண்ண ஓட்டம் சார்ந்த பிரச்சனை.
பொறுமையிழக்கும்
போது ஏற்படும் பதற்றமான மற்றும் பரபரப்பான எண்ண ஓட்டம் முதலில் நரம்பு மண்டலத்தைத்
தாக்கும். பின் இரத்த ஓட்டத்தைத் தாறுமாறாக இயங்கச் செய்யும். கிட்டதட்ட அது மது அருந்தி
விட்டு வாகனம் ஓட்டுவதைப் போலத்தான்.
டென்ஷன் ஆகி
சத்தம் போட்டால்தான் வேலையே நடக்கிறது என்று சொல்பவர் நீங்கள் என்றால்... முப்பது
வயதுக்கு மேல் உங்கள் பி.பி., சுகர், கொலஸ்ட்ரால் எல்லாவற்றையும் மாதந்தோறும் பரிசோதித்துப்
பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை வந்து விடும். அப்புறம் பி.பி., சுகர், கொலஸ்ட்ரால்
என்று நம்மையே பார்த்துக் கொண்டிருந்தால் வெளியே தெரியும் வாய்ப்புகள் எப்படிக் கண்ணுக்குத்
தெரியும்? அப்போது கண்ணுக்குத் தெரிவதெல்லாம் வருகின்ற மாதத்திலாவது பி.பி., சுகர்,
கொலஸ்ட்ரால் குறைந்திருக்குமா என்று அதையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
அடிக்கடி
பொறுமையிழந்து கொண்டிருந்தால் அதை நிகழ்காலத்தில் உடம்பு சமாளித்து விடும். வருங்காலத்தில்
சமாளிக்க முடியாமல் போராடும் நிலைக்கு ஆளாகி விடும்.
ஆகவேதான்
பொறுமையை மிக நல்ல பண்பாகக் கூற வேண்டியிருக்கிறது.
பொறுமை கடலினும்
பெரிது என்பார்களே! உண்மைதான். உடல்நலத்தை விட இந்த உலகில் பெரியது எது? பெரிய பெரிய
கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளில் போய் பார்த்தீர்கள் என்றால் தெரியும் உடல்நலம் என்பதற்கான
விலை என்பது எவ்வளவு காஸ்ட்லி என்று!
*****
No comments:
Post a Comment