22 Jan 2019

தலீவர் இருக்கிறார்!


தலீவர் இருக்கிறார்!
வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்கிறாங்க! கொஞ்சம் போய் பால் வாங்கிட்டு வான்னு சொல்லிப் பாருங்கள். த்துப்பூன்னு மூஞ்சுல காறித் துப்பிட்டுப் போற நம்ம பசங்கதான் கட் அவுட்டு எல்லாம் வெச்சு தனக்கு பிடிச்ச நடிகருக்கு பால் அபிஷேகம் பண்றாங்க.‍
டேய் தம்பி! கொஞ்சம் வரிசையில நின்னு ரேஷன் சாமான்களை வாங்கிட்டு வந்திடுடா! என்று சொன்னால் உனக்கெல்லாம் வேற இல்லியா என கேட்குற தம்பிமார்கள்தான் வியர்க்க விறுவிறுக்க கால் கடுகடுக்க தியேட்டர் வாசல் முன்னாடி தன்னோட தலீவர் படத்துக்கு டிக்கெட் வாங்குறதுக்காக பெரிய க்யூவ்ல நிற்கிறாங்க.
யப்பாடி! தாத்தாவுக்கு உடம்பு சரியில்லப்பா! கொஞ்சம் பக்கத்து தெரு ஆஸ்பிட்டல் வரைக்கும் வாடான்னு கெஞ்சி எந்தப் பிள்ளையிடம் கேட்டோமோ, வராத அந்தப் பிள்ளைதான் தன் தலீவருக்காக ப்ளக்ஸ் வைக்கவும், போஸ்டர் அடிச்சு ஒட்டவும் தெரு தெருவா அலையுது.
இதுல ஒரு அம்மைக்கு ரொம்ப புளங்காகிதம்! எம் புள்ள என்ன சிலுக்குக்கும், நமீதாவுக்குமா அலையுது. டீசன்டா ஒரு தலீவரை வெச்சுகிட்டு அந்தத் தலீவருக்காக அலையுது என்று ரொம்பவே பெருமிதம் அந்தத் தாய்க்கு.
அதோட தலீவர் ஆட்சிக்கு வந்துட்டா எம் புள்ளையை சில்லாவுக்கே கலெக்டரு ஆக்கிடுவாங்களாம்! என்ற அந்தப் பேரன்பின் தாய் சொல்வதைக் கேட்கும் போது...
 கலெக்டர் ஆவதற்கு ஐ.ஏ.எஸ். எனும் தேர்வு எழுத வேண்டும், அதில் தேர்வாக வேண்டும் என்ற அறிவை எல்லாம் கடாசி எறிந்து விட்டு தன் பிள்ளைக்காக கண்மூடித் தனமாக நம்பும் அந்தத் தாயைப் பார்க்கும் போது...
இந்த உலகம் இன்னும் தாய்மையால்தான் இயங்குகிறது என்பது பிடிபடுகிறது.
அந்தத் தாய்ப்பாலின் ஊட்டம்தான் தலீவர்களுக்குப் பஞ்சமில்லாத சினிமாத்துறையை உருவாக்குகிறது என்பதை யார் சொல்லித் தெரிய வேண்டும் இந்தச் செந்தமிழ் தேசத்துக்கு?!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...