3 Jan 2019

மனப்போராட்டத்தின் கதை


மனப்போராட்டத்தின் கதை
எதைத் தீர்மானிக்க முடியாதோ, அதைத் தீர்மானிக்க நினைப்பதுதான் மனதின் பிரச்சனை. அது பிரச்சனை என்பது புரியாமலே அதன் பின்னே தீர்த்து விட முடியும் என்று மனம் செல்லும் பாருங்கள், அதுதான் புதைகுழி மற்றும் படுகுழி. ‍வேறு எதுவும் மோசமான குழிகளின் வகையறா இருந்தால் அந்தப் பெயரையும் அதற்குச் சூட்டி விடலாம்.
அதைத் தீர்மானிக்க முயல்வதால் அதை அடைய முடியும் என்று நினைக்கிறது மனம். அதைத் தீர்மானிப்பதன் மூலம் அதைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது மனம். அதுவோ கட்டுபாட்டுக்குள் வராதது.
மனதோடு மனம் போராடத் துவங்கும் அந்தப் போராட்டம் முடிவில்லாமல் நீளப் போகிறது என்பது புரியாமல். இந்த ஒரு விசயத்தில் மட்டும் போராடத் தெரியாமல் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது அனுபவப்பட்டப் பிறகுதான் புரிய வரும். அதற்குள் அநேகமாக வாழ்நாள்கள் ஒட்டுமொத்தமாக உறிஞ்சப்பட்டு இருக்கும்.
ஞானிகள் என்போர் அந்தப் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டவர்களே. அதனால்தான் அவர்களின் வார்த்தைகள் சாசுவதமாக இருக்கின்றன. அப்படிக் கண்டு கொள்ளாமல் விட்டவர்களே தன்னை வெல்கிறார்கள். அப்படித் தன்னை வெல்வது உலகை வெல்வதற்கு நிகராக ஆகிறது. ஏனென்றால் உலகை வெல்ல முடிவது போல அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை தன்னை வெல்வது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...