4 Jan 2019

புரட்சியாளர்களைப் பிறக்க வைப்பவர்கள்


புரட்சியாளர்களைப் பிறக்க வைப்பவர்கள்
மட்டம் தட்டுபவர்களுக்கு ஓர் ஆனந்தம்
அந்த அளவோடு விட்டார்களே என்று
சந்தோசப்படுவது மேல்
ஆனால் ஆத்திரப்படக் கூடாது
அவர்களும் கண்டபடி வார்த்தைகளைப்
பிரயோகித்து நோகடிக்கக் கூடாது
வார்த்தைகளால் தளர்ந்து விட்டால்
இன்னும் வெறுப்பேற்றும் வகையில் திட்டுவார்கள்
விரக்தி கொண்டு சிந்திக்கும் வகையில்
யாதும் செய்வார்கள்
மனதளவில் பலஹீனமானவர்களுக்கு
மிகப்பெரியத் திட்டுதலாகத் தெரியும் அது
எப்போதும் புதிது அல்ல
கோபத்தில் எதையாவது செய்யத் தோன்றினால்
விளைவுகள் இப்போது இருப்பதை விட
மோசமாகப் போவது நிச்சயம்
காலப் போக்கில் எல்லாம் மாறும் என்பதால்
புரட்சிகள் தேவையில்லை என்பார்கள்
புரட்சியாளர்களைப் பிறக்க வைப்பவர்கள்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...