4 Jan 2019

அல்சரிலிருந்து விடுபட...


அல்சரிலிருந்து விடுபட...
அல்சர் என்பது இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு நோயாகி விட்டது.
நேரம் தவறிய உணவு அதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
அது மட்டும்தான் காரணமா?
நேரம் சரியாக உணவு உண்ணும் நண்பர் ஒருவர் அல்சரால் அவதிப்பட்ட போது அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பது புரிந்தது.
நம் நாட்டில் எத்தனையோ பேர் பட்டினி எனும் நோயால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் அல்சரால் பாதிக்கப்படுவதில்லை.
அப்படியானால் அல்சருக்குக் காரணம் நேரம் தவறிய உணவு மட்டுமே இல்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
உணவுதான் முக்கியக் காரணம்.
எப்படி என்கிறீர்களா?
நேரம் சரியாக உண்டு அல்சரால் அவதிப்பட்ட நண்பர் பலவித மருத்துவ முயற்சிகளுக்குப் பிறகு, தன் உணவில் ஊறுகாய் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தினார். ஆச்சரியப்படும் விதமாக சில நாட்களில் அவர் அல்சரிலிருந்து விடுபட்டார்.
உணவில் செய்த அச்சிறு மாறுதல் எப்படி அவரை குணமாக்கியது என்பது ஆச்சரியமாக இருந்தது.
அப்புறம்,
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு என்ற திருக்குறளைப் படித்த போது உண்மை விளங்கியது.
உணவில் செய்யும் சிறு மாறுதல்களே நோய்களைக் குணப்படுத்துகிறது என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
பிறந்ததிலிருந்து நாம் உணவு உண்கிறோம் என்கிற அடிப்படையில், நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்த உணவு நமக்கு ஒத்துக் கொள்ளும், எது ஒத்துக் கொள்ளாது என்கிற புரிதல் நம்மிடம் நிச்சயம் இருக்கும். அத்தோடு ஒவ்வொரு உணவின் குணத்தையும் நம் முன்னோர்களிடம் கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொண்டால் செலவின்றியே நோய்களைக் குணப்படுத்தலாம்.
அப்புறம் இந்த அல்சருக்கு அதீத கோபம், அதீத கவலை, அதீத மனஉளைச்சல் போன்றவைகளும் காரணமாக இருக்கும் என்கிறார்கள். ஊறுகாய் என்பதும் அதீத உப்புதானே. ஆகவே இந்த அதீத என்ற எதுவும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. இந்த அதீத விசயங்களை விலக்கிக் கொண்டால் அல்சரிலிருந்து செலவின்றி விடுபடலாம் போலிருக்கிறது.
காசா? பணமா? ஊறுகாயை விலக்கி வைப்பதால் அல்சரிலிருந்து விடுபடலாம் என்றால் அதை விலக்கி வைத்து முயற்சித்துப் பார்ப்பதில் என்னவாகி விடப் போகிறது?
அப்புறம் உணவு உண்பதற்கான நேரம் தவறும் போது அந்நேரத்தில் ஒரு குவளை நீர் அருந்துவது அல்சரிலிருந்து காக்கும் என்கிறார்கள். இதைக் கடைபிடிப்பதில் என்ன சிரமம் இருந்து விடப் போகிறது?
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...