12 Jan 2019

மனஇறுக்கம் எதில் இருக்கிறது?


மனஇறுக்கம் எதில் இருக்கிறது?
எதில் இலக்கை நிர்ணயித்துக் கொண்டாலும் மனஇறுக்கம்
இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டாலும் அதிலும் மனஇறுக்கம்
இந்தத் தரம் குறையக் கூடாது என்று மெனக்கெட்டாலும் அதிலும் மனஇறுக்கம்
செயல்திறனோடு செயல்பட வேண்டும் என்று நினைத்தாலும் அதிலும் மனஇறுக்கம்
சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டாலும் அதிலும் மனஇறுக்கம்
இப்படி எல்லாவற்றிலும் மனஇறுக்கம் என்றால்...
 சரியாக இருக்க நினைப்பது தவறா?
இலக்கை நிர்ணயித்துக் கொள்வது தவறா?
தரம் குறையக் கூடாது என நினைப்பது தவறா?
செயல்திறனோடு செயல்பட நினைப்பது தவறா?
திட்டமிட்டுக் கொள்வது தவறா?
இதில் தவறு என்பது சரியாக இருக்க நினைப்பதிலோ, இலக்கை நிர்ணயித்துக் கொள்வதிலோ, தரம் குறையக் கூடாது எனக் கருதுவதிலோ, செயல்திறனோடு செய்ய நினைப்பதிலோ இல்லை. ஆர்வம் இல்லாமல் இருப்பதில் அந்த தவறு இருக்கிறது. எதில் விருப்பம் இல்லையோ அதில் இலக்கை நிர்ணயிப்பதில் அந்த தவறு இருக்கிறது. எது உங்களுக்குப் பிடித்தமானதாக இல்லையோ அதில் செயல்திறனோடு செயல்பட நினைப்பதில் அந்தத் தவறு இருக்கிறது.
உங்களுக்குப் பிடித்தமான ஒன்றில்,
நீங்கள் விரும்பும் ஒன்றில்,
உங்களுக்கு ஆர்வமான ஒன்றில்
மனஇறுக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அப்படி பிடித்தமோ, விருப்பமோ, ஆர்வமோ இல்லாத ஒன்றில் மனஇறுக்கத்தைத் தவிர வேறு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...