11 Jan 2019

தலைபோகும் பிரச்சனைகள்


தலைபோகும் பிரச்சனைகள்
உலகுக்கு தலைபோகும் பிரச்சனை என்ன என்றால் தான் சொல்வதை யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான்.
ஒருவர் சொல்வதை இன்னொருவர் கேட்க வேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கிறது? கேட்காமல் இருப்பதற்கும் அவரவர்க்கு சுதந்திரம் இருக்கிறது. ஒருவரின் சுதந்திரத்தில் இன்னொருவர் தலையிட முடியாது.
ஒருவர் சொல்வதைக் கேட்டு நடப்பதைப் போல கேட்காமல் இருப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.
உலகம் எதையோ ஒரு  சொல்லைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
உலகின் சட்டங்கள் அப்படி உருவாக்கப்பட்டவைகள்தான்.
உலகின் பாதுகாப்புக்காகத்தான் சட்டங்கள் என்று சொல்லப்பட்டாலும் கடைசியில் அதிகாரம் மிக்கவரின் பாதுகாப்புக்காக அவைகள் மாறி விடுகின்றன.
சட்டத்தை மீறுவது தண்டனைக்கு உரியதாக சொல்லப்பட்டாலும், தண்டனைக்கு உட்படாமல் சட்டத்தை மீறத் தெரிந்தவர் சாமர்த்தியசாலியாகப் பார்க்கப்படுகிறார்தானே!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...