12 Jan 2019

விருது பெறாமைக்கான உண்மையான காரணங்கள்


விருது பெறாமைக்கான உண்மையான காரணங்கள்
ஏன் எந்த விருதுக்கும் விண்ணப்பிப்பதில்லை என்று கணியனிடம் கேட்கப்பட்டது. அதில் உண்மையைச் சொல்வதில் ஒரு தயக்கம் இருப்பதாகச் சொன்னார் கணியன். தயக்கத்தை விடுத்து இன்றே உண்மையைச் சொல்ல வேண்டும் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டதில்... கணியன் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு சொன்னார், விருதைப் போய் வாங்க வேண்டும் என்பதில் ஒரு அலுப்பு இருக்கிறது.
ஒரு முறை விருது வாங்கிய குன்றனார் அதன் பின் விருது என்றால் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார். குன்றனாரைக் குந்த வைத்து காரணம் கேட்கப்பட்ட போது அவர் சொன்னார், ஒரு முறை விருது வாங்கினால் மறுபடியும் மறுபடியும் விருதுகளைக் கொடுத்துக் கொடுத்து கொன்று விடுகிறார்கள்.
இது போன்ற பிரச்சனைகள் கவிஞர்கள், கவிக்குரிசில்கள், கவிவேந்தர்கள், கவியரசர்கள் போன்ற விருது வகையறாக்களில் எண்ணிக்கையில் அதிகம்.
நீங்கள் கவிதை எழுதாமல் இருந்தால் கவிதை எழுதாமல் இருப்பது எவ்வளவு உத்தமம் என்பதைக் கவிதை எழுதுவதற்கு முன்னே புரிந்து கொண்டு விட வேண்டும் என்பது குன்றனாரின் தாழ்மையான வேண்டுகோள்களில் ஒன்று.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...