11 Jan 2019

வடிவங்கள் கைகளில்...


வடிவங்கள் கைகளில்...
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது மனம் கடினமாகி விடுகிறது.
அப்படி இருக்க வேண்டியதன் அவசியத்தை உணரும் போது மனம் மென்மையாகி விடுகிறது.
ஒரே மனம். இரண்டு விதமாகச் செயல்படுகிறது களிமண்ணைப் போல.
நீரைக் கலக்கும் போது குழைவாகும் களிமண், நீரின்றிப் போகும் போது கடினமாவைப் போல எனச் சொல்லலாம்.
களிமண்ணைக் குழைவாக்கும் நீரைப் போலத்தான் புரிதல்.
குழைவாக்கி வேண்டிய வடிவம் கிடைத்த பின் இறுகும் களிமண் அழகிய உருவம் பெறுகிறது.
புரிதலுக்குப் பின் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிலையைப் பெறும் மனம் அமைதியைப் பெறுகிறது.
துரதிர்ஷ்டவசமாக மனம் என்பது செதுக்கும் சிற்பம் போல இருப்பதில்லை. குழைவாக்கி வடிவம் கொடுக்கும் களிமண்ணைப் போலத்தான் இருக்கிறது.
குழந்தைகளைக் கூட களிமண்ணுக்கு உதாரணமாகத்தான் சொல்வார்கள். நாம் வேண்டிய வடிவங்களைப் பிடிக்க முடியும். நாம் எப்படிப்பட்ட வடிவங்களைப் பிடிக்கப் போகிறோம் என்பது பிடிப்பவர் கைகளில்தான் இருக்கிறது.
மனமும் குழந்தையைப் போல, களிமண்ணைப் போல. எப்படிப்பட்ட வடிவத்தைப் பிடிக்கப் போகிறோம் என்பது அவரவர் புரிதலைப் பொருத்தது.
புரிந்து கொண்டவர் நல்ல வடிவமாகப் பிடிக்கிறார்.
புரிந்து கொள்ள விரும்பாதவர் மனம் போன போக்கில் பிடிக்கிறார்.
நாம் எப்படி வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம். அதற்கானச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...