11 Jan 2019

பண்டிகைக் கால சார்ஜ் சீட்கள்


பண்டிகைக் கால சார்ஜ் சீட்கள்
பொங்கலுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லும் காலம் ஒன்று இருந்தது. அது மொபைல் கம்பெனிகள் பொங்கல் அன்று எஸ்.எம்.எஸ். அனுப்பினால் கட்டணம் வசூலித்த காலம்.
என்ன ஒரு அராஜகம் என்று அதற்கு எதிராக பொங்கலை விட அதிமாகப் பொங்கி இப்போது அதையெல்லாம் அடித்துத் துவைத்துக் காயப்போட்ட வாட்ஸ் அப் வந்த பிறகு அதையெல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை.
எஸ்.எம்.எஸ். அனுப்புவதெல்லாம் ஓல்ட் பேஷன் என்ற நிலையை அது எய்தி விட்டது. இது எஸ்.எம்.எஸ்.க்கு வந்த சோதனை. கொஞ்ச காலம் வரை எஸ்.எம்.எஸ்.இல் சிலிண்டர் புக் பண்ணியதும் போய் ஆப்கள் வந்து அதற்கும் ஆப்பு அடித்து விட்டது.
இதனால் எல்லாம் எஸ்.எம்.எஸ். செத்து விட்டதா என்ன?
பேங்குகள்தான் எஸ்.எம்.எஸ்.களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. பணம் எடுத்தால் எஸ்.எம்.எஸ்., பணம் போட்டால் எஸ்.எம்.எஸ்., ஓ.டி.பி. பார்க்க எஸ்.எம்.எஸ். என்று பேங்ககளின் கைப்பிள்ளையாக இருக்கின்றன எஸ்.எம்.எஸ்.
உலகமே எஸ்.எம்.எஸ்.லிருந்து ஒழிந்த பிறகு அந்த எஸ்.எம்.எஸ்.ஐ அனுப்பி அதற்கு ஒரு கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன பாருங்கள் பேங்குகள்!
சுருக்கமாகச் சொன்னால் பேங்குகள் கட்டணம் வசூலிக்க தற்போது எஸ்.எம்.எஸ்.கள் பயன்படுகின்றன.
நம்மை வேகமாக மாறச் சொல்லும் பேங்குகள். பேங்குகள் மாற காலம் எடுத்துக் கொள்ளும்.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...