11 Jan 2019

கவிதையும் கொலை செய்யும்


கவிதையும் கொலை செய்யும்
கவிதைகள் என சொல்லப்பட்ட சிலவற்றை வாசித்த போது அதற்காக வரையப்பட்டிருந்த ஓவியங்கள் நன்றாக இருந்தன. இவ்வளவு மோசமான கவிதைகளுக்கு எப்படி இவ்வளவு அழகான ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன என்று நெடுநேர யோசனை. கவிஞர் எனும் சொல்லப்படும் அவர் தன் போக்கில் கவிதை எழுதியிருக்கிறார். ஓவியர் தன் போக்கில் ஓவியம் வரைந்திருக்கிறார். இரண்டும் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஓவியர் மனதைக் கவர்ந்து விட்டார். கவிஞர் மனதைக் கொன்று விட்டார்.
மனதைக் கொன்ற அந்தக் கவிதைகளை வாசிக்க நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். அதைச் சொல்லி இன்னொரு கொலை நிகழ்வதை ஏன் அனுமதிக்க வேண்டும்? நம் சராசரி வாழ்வில் எப்படி எதிர்மறைகள் அதிகக் கவனம் பெறுகின்றன என்றால் அது இப்படித்தான். கொலைகாரக் கவிஞர் என்றாலும் நீங்கள் ஒன்றைக் கவனிக்கத்தான் வேண்டும். அவர் கவிஞர் என்ற பட்டம் பெற்று விட்டார் பாருங்கள்.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...