14 Jan 2019

ரேஷன் கடையில் ஆண்கள்


ரேஷன் கடையில் ஆண்கள்
இந்தக் கிராமப்புறங்களில் ரெஷன் கடைகளில் ஆண்களைப் பார்ப்பது அபூர்வம். அத்திப் பூத்தாற் போல என்ற சொல்வார்களே, அது இந்த ரேஷன் கடையில் ஆண்களைப் பார்ப்பதற்குக் கச்சிதமாப் பொருந்தும்.
பெண்டுகள்தான் ரேஷன் கடையில் காத்திருந்து நின்று தலை வலிக்க அரிசி மூட்டைகளைச் சுமந்து வரும். ஒரு சில பெண்டுகள் ரேஷன் பொருட்களை வாங்கி வைத்து விட்டு போன் அடிக்கும். வெட்டித் தண்டமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஆண்கள் அந்த நேரத்துக்கு அலுத்துக் கொண்டு டூவீலர்களில் வந்து எடுத்துக் கொண்டு போகும்.
பொறுப்பாக ஒரு சில ஆண்கள் ரேஷன் கடைக்குப் போனால் போடா பொட்டப் பயலே என்று கொன்னே புடுவார்கள். அதற்காக விதிவிலக்குகள் இல்லையென்றெல்லாம் சொல்லி விட முடியாது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு சில பெரிசுகள், சில குடும்பஸ்தர்கள் போவதும் உண்டு.
இப்படியெல்லாம் பேசிய ஆண்வர்க்கமா பொங்கல் பரிசு வாங்க பெண்டுகளைப் போக விடாமல் ரேஷன் கடையில் வரிசை வரிசையாக சாரை சாரையாக நின்றது?
என்னடா இந்த நாட்டுக்கு வந்த கேடு என்று பார்த்தால் பொங்கல் பரிசு பொருட்களைப் பொறுப்பாக வாங்கி வந்து வீட்டில் கொடுத்து விட்டு, அதிலிருந்த ஆயிரம் ரூபாயை உருவிக் கொண்டு போய் டாஸ்மாக்கில் போய் நிற்கிறது இந்த ஆண்வர்க்கம்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...