3 Jan 2019

சண்டை விளையாட்டுகள்


சண்டை விளையாட்டுகள்
எச்சரிக்கையாகப் பேசு
அவர்கள் விளையாட்டாகப் பேசலாம்
வேடிக்கை செய்யலாம்
நீயும் அப்படிச் செய்து விடலாகாது
அவர்களுக்குப் பிடிக்காது
எல்லைத் தாண்டி விளையாட்டுப் பண்ணுவார்கள்
நீயும் விளையாட்டாகச் செய்து விடாதே
உன் கதி அதோ கதியாகி விடும்
நீயும் விளையாடி அவர்களும் விளையாடி
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில்
சந்தித்துத்துக் கொள்ளும் நிலை வந்தால்
அமைதியாக இருந்து விடு
காலம் கூட இந்த விசயத்தில்
அவர்களிடம் தோற்று விடுகிறது
இதனால்தான் விளையாட்டு வேண்டாம் என்கிறேன்
நீயோ விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாய்
என் செல்லக் குழந்தாய்
விளையாடுவதானால் உன்னோடு விளையாடிக் கொள்
உன்னோடு சண்டை பிடிக்க ஆளேது
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...