12 Jan 2019

பூரிப்பு


பூரிப்பு
நாற்காலியில் உட்கார்ந்து எழுதுவதும் உழைப்பு என்றாகி விட்டது. செல்பேசியில் பேசி விளக்கம் சொல்வதும் உழைப்பு என்றாகி விட்டது. ஊர் ஊராக அலைவதும் உழைப்பு என்றாகி விட்டது. ஓரிடத்தில் நாற்காலியில் உட்கார்ந்து  கொண்டே கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பதும் உழைப்பு என்றாகி விட்டது. இதுபோன்ற உழைப்புகள் மிகுந்த விட்ட உலகில் சிறிது உடல் உழைப்பில் ஈடுபடும் போது கிடைக்கும் மலர்ச்சியே அலாதியானது. அதிலும் மண்வெட்டியைப் பிடித்து குழி வெட்டி, செடியை நட்டு, தண்ணீரை ஊற்றி விட்டு வரும் போது கிடைக்கும் மலர்ச்சி இருக்கிறதே செடி பூப்பதற்கு முன் மனம் பூத்து விடுகிறது. இதைத்தான் பூரிப்பு என்கிறார்களோ என்னவோ!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...