20 Jan 2019

புரிந்தவர்கள் சொல்லுங்கள்!


புரிந்தவர்கள் சொல்லுங்கள்!
பயம்தான் பிரச்சனை. இந்தப் பயத்தை எப்படி வெல்வது? அது முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது என்ற பிலாக்கணத்தோடு மைண்ட் மாஸ்டரிடம் சென்ற போது அவர் கீழ்காணும் விளக்கங்களைச் சொன்னார்.
இந்த விளக்கங்களைப் புரிந்து கொள்வதை விட பயமே பரவாயில்லை என்று தோன்றியது. அதற்காகவெல்லாம் விட்டு விட முடிகிற விசயமா இது? புரியக்கூடியவர்கள் எவரேனும் இருக்கலாம். புரிந்தால் சொல்லுங்கள்.
அவர் சொன்னதன் விவரம் வருமாறு,
"எதையும் உறுதி பண்ணாதே. எல்லாவற்றையும் இப்படியும் அப்படியுமாக ஒரு குழப்ப நிலையில் நின்று பேசு. அப்படியே செயல்படு.
மனம் என்பது எதையும் தாண்டி செய்ய நினைக்கும் ஒரு வஸ்து. அதை நம்பாதே. நம்பினால் அப்புறம் இயலாமை உணர்வுகளால் சோர்ந்து போவாய்.
Over Perfection is Over Tension.
ஒரு புரியாத தத்துவத்தை வாசிக்கும் போது மனம் அமைதி நிலைக்குத் திரும்புகிறது. ஆன்மாவுக்கு நல்ல விருந்து படைத்தது போல ஆகிறது. நம் மனம் என்பது அது போன்ற புரியாத தத்துவங்களை உள்வாங்கிக் கொள்வதில் இருக்கிறது.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இப்போது நான் சொல்லப் போகும் வாக்கியம் புரிகிறதா என்று பார்,
குண்டாக இருப்பவர்கள் இளைத்துப் போய் விட்டேன் என்று சொல்லலாம். ஒல்லியாக இருக்கிறவர்கள் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது."
உங்களுக்கு ஏதேனும் புரிந்தால் அவசியம் சொல்ல வேண்டும். காத்துக் கொண்டு இருக்கிறேன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...