2 Jan 2019

கொண்டாட்ட சரக்கு மனநிலை


சாவு சமாச்சாரங்களில் அழுகை குறைந்து கொண்டு வருகிறது. முரட்டுக் குத்து குத்துகிறார்கள். டாஸ்மாக் சரக்கைப் போட்டு விட்டு இன்னொரு சாவு விழும் அளவுக்கு விழுந்து புரள்கிறார்கள்.
கருமாதிகளைச் சொல்லவே வேண்டியதில்லை. ஒரு அடிதடி, ஒரு வெட்டுக்குத்து இல்லாமல் நடந்தால் அது கருமாதியே இல்லை என்று சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.
மக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விட்டார்கள். ஒரு கொண்டாட்டத்தின் அப்பட்ட சாட்சி அது நடந்து முடிந்த பிறகு அங்கு குவியலாகவோ, அங்கங்கோ இறைந்து கிடக்கும் டாஸ்மாக் பாட்டில்கள்தான்.
இந்தக் கொண்டாட்ட மனநிலை கஜா புயலையும் விட்டு வைக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடியில் கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மீண்டெழும் வகையில் சில்க் ஸ்மிதா பிறந்த நாளை செமையாகக் கொண்டாடித் தீர்த்து இருக்கிறார்கள் கலா ரசிகர்கள்.
இதை சில்க் ஸ்மிதா உயிரோடு இருந்திருந்தால் அவரே ஏற்றிருக்க மாட்டார்.
உங்களுக்கு எல்லாம், கஜா புயலையே கூஜாவில் அடைத்து விட்டோம் என்று சொன்ன அமைச்சரின் வாசகம் ஞாபகத்துக்கு வருகிறதா?
இப்படித்தான் பாஸ் சுனாமியில் ஸ்விம்மிங் போட்டு, ஸ்விம்மிங் போட வேண்டிய ஆற்றில் மணலை வாரி சுருட்டி, வாரிச் சுருட்டிய மணலை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்! நாம் மண்சோறு தின்பதாக பெருமைபட்டுக் கொண்டு, ஒரு கொண்டாட்ட சரக்கு மனநிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...