10 Jan 2019

இவர்களுக்கும்தானே சேவைகள்!


இவர்களுக்கும்தானே சேவைகள்!
டிஜிட்டல் பரிவர்த்தனை என்று சொல்லப்படும் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், வாலட்டுகள் போன்றவை நகரப் பொருளாதாரத்துக்கு எவ்வளவோ உதவியிருக்கலாம். கிராமப் பொருளாதாரத்துக்கு ரொக்கப் பணமே வசதியாக இருக்கிறது.
நீங்கள் ஒரு கிராமத்தில் அரிதாக அமைந்திருக்கு ஏ.டி.எம். மையம் ஒன்றில் நின்றிருந்தால் உங்களுக்குத் தெரியும் பின்வரும் விசயங்கள்
1. ஏம்ப்பா! உனக்கு இந்த மெஷின்ல பணம் எடுக்கத் தெரியுமா? தெரிஞ்சா கொஞ்சம் பணம் எடுத்துக் கொடேன் என்பார் வயதான தாத்தா ஒருவர்.
2. கார்டைச் செருகி எடுத்து பின் நம்பர் சொல்லுங்க தாத்தா என்றால், அந்த அட்டையில எழுதி இருக்கும் பாரு என்பார் தாத்தா.
3. எவ்வளவு பணம் எடுக்கணும் தாத்தா என்றால், எவ்வளவு இருக்குன்னு பாரு என்பார் தாத்தா.
4. எவ்வளவு இருக்கு என்று பார்த்துச் சொன்ன பிறகு, ஒரு ரெண்டு நூறு எடுப்பா என்பார் தாத்தா.
5. எடுத்துக் கொடுத்த பின், மவராசனா இருப்பா என்பார் தாத்தா. சொல்லி விட்டு இந்த முறை நீ எடுத்துக் கொடுத்துட்டே! அடுத்த முறை எடுக்குறதுக்கு உன்னை மாதிரி மகராசன் வரணுமே என்று விசனப்பட்டுக் கொண்டே செல்வார் தாத்தா.
இதையெல்லாம் கடந்தால் டவர் சிக்னல் கிடைக்காத கிராமங்கள் எத்தனை இருக்கிறது தெரியுமா?
அப்படியே டவர் கிடைத்தாலும் தாத்தா சொல்வார், ஏம்ப்பா இந்த நம்பருக்குக் கொஞ்சம் போன் போட்டுக் கொடு என்று கீபேடு மொபைலைக் கொடுத்து பையில் இருக்கும் சின்ன டைரியை எடுத்து அதிலிருக்கும் நம்பரைக் காட்டுவார் தாத்தா.
இவர்களுக்கும்தானே அரசின் சேவைகள் மற்றும் அவர்களின் பொருளாதாரத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் போய் சேர வேண்டும். இந்த எளிய மனிதர்களுக்குப் புரிந்தது எல்லாம் ரொக்கப் பண பரிமாற்றம்தான். ரொம்ப அசால்ட்டாக அவர்கள் பணம் எண்ணுவதாகட்டும், கொடுக்க வேண்டிய பணத்தை முன்கூட்டியே பொட்டலம் கட்டி வைத்துக் கொள்வதாகட்டும் அவர்களை அடித்துக் கொள்ளவே முடியாது.
நீங்கள் ஒன்று பார்த்திருக்கலாம், டிஜிட்டல் பரிவர்த்தனையில் புகுந்து விளையாடும் ஒருவரிடம் பணத்தை ரொக்கமாகக் கொடுத்துப் பாருங்கள். கைகளால் தப்புத் தப்பாக எண்ணி, மிஷினில் போட்டு சகட்டு மேனிக்கு நான்கு முறை எண்ணி, மிஷினையும் நம்பாமல் பின் கைகளால் ஒருவாறு தட்டுத் தடுமாறி எண்ணி மனசுக்கள் எண்ணிக் கொண்டே இருப்பார். அவர் எண்ணிக் கொண்டே இருப்பார்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...