1 Jan 2019

புத்தாண்டு உறுதிமொழி


2019 புத்தாண்டு பிறந்து விட்டது.
புத்தாண்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுதிமொழி ஏற்று இருப்பீர்கள்.
பெரும்பாலானோர் 100 க்கு 90 விழுக்காடு உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற புத்தாண்டு உறுதிமொழி எடுத்து இருப்பீர்கள்.
காலந்தவறாமையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதிமொழிக்கும் பற்றாக்குறை இருந்திருக்காது.
பீடி, சிகரெட், பாக்கு, மது சமாச்சாரங்களை விடுவது குறித்த உறுதிமொழிகளும் இருந்திருக்கக் கூடும்.
பூரி, பரோட்டா, சமோசா சாப்பிடக் கூடாது என்று சபதம் எடுத்தவர்களும் இருப்பார்கள்.
இந்தப் புத்தாண்டிலிருந்தாவது காலை ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்ற உறுதிமொழிகளும் எடுக்கப்பட்டு இருந்திருக்கும்.
வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் பார்ப்பதில் கட்டுபாடு கொண்டு வருவது வரை எவ்வளவோ புத்தாண்டு உறுதிமொழிகள், சபதங்கள் அம்மா சத்தியமாக எடுத்து இருக்கப்பட்டு இருக்கும்.
இந்தப் புத்தாண்டு துவங்கும் இந்த இனிய நாளில் டாஸ்மாக் எடுத்து இருக்கும் உறுதிமொழி என்னவென்றால்... இந்தப் புத்தாண்டு தினத்தில் 300 கோடி சரக்கு விற்க இலக்கு நிர்ணயித்து உறுதிமொழி எடுத்ததுதான்.
இதன் மூலம்...
யாராவது இந்தப் புத்தாண்டிலிருந்து குடியை விடுவதாக உறுதிமொழி எடுத்து அதை அவரால் காப்பாற்ற முடியாமல் போய் இருந்தால், அதை விட முடியாததற்கு அவரை மட்டும் குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை என்பதை அவர் உறுதிமொழி எடுத்த போது சுற்றிக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் உணர வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாகவே முன்வைக்க விரும்புகிறேன்.
*****

2 comments:

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...