1 Jan 2019

கவனம் பெறும் 2018


கவனம் பெறும் 2018
2018 பெண்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டு.
மீ டூ புகாரில் எம்.ஜே.அக்பர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.
அதே மீ டூவில் பிரபல திரை முகங்களின் முகத்திரைகள் கிழித்து தொங்கவிடப் பட்டு இருக்கின்றன.
மாணவிகளைப் பாலியல் செயல்களில் ஈடுபடுத்த முனைந்த பேராசிரியை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பெண்களுக்கு சவுதி அரேபியாவில் கார் ஓட்ட அனுமதி அளித்து இருக்கிறது அந்த நாட்டு அரசாங்கம்.
2018 அரசியலுக்கும் முக்கியமான ஆண்டு.
கமல் மக்கள் நீதி மய்யம் தொடங்கியிருக்கிறார்.
தினகரன் அ.ம.மு.க. தொடங்கியிருக்கிறார்.
ரஜினி மக்கள் மன்றம் மூலம் வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்.
ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இணைப்பு நடந்து இருக்கிறது.
ஸ்டாலின் தி.மு.க. தலைவராகியிருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல் எல்லாம் தள்ளிப் போயிருக்கின்றன.
ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. சரிவையும், காங்கிரஸ் மீட்சியையும் சந்தித்து இருக்கின்றன.
2018 பிரச்சனைகளுக்கும் முக்கியமான ஆண்டு.
நீட் தேர்வு நுழைவுத் தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் அமைந்தது,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு,
பிரபல ரெளடியின் பிறந்த நாளில் அரிவாளால் கேக் வெட்டியது,
என்னை கைது செய்து பாருங்கள் ரெளடி வாட்ஸ் அப் மிரட்டல் விட்டது,
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து,
கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீ விபத்து,
விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிப்பது போல நடந்து கொண்டது என்று நிறைய சொல்லலாம்.
என்றாலும் இந்த 2018 இல்தான்
உச்ச நீதிமன்றத்தின் காவிரித் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது,
தமிழ்நாடு அரசு ஆன்லைன் பத்திரப் பதிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
2019 இலிருந்துதான் துவக்கம் என்றாலும் 2018 லேயே ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருளுக்கானத் தடையைத் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
கஜா டெல்டாவைப் புரட்டிப் போட்டாலும், புயல் போல் எழுந்த தன்னார்வலர்களின் மீட்டெடுப்பால் டெல்டாவின் கண்ணீர் துடைக்கப்பட்டதும் 2018 இல்தான் நிகழ்ந்து இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...