அவர்கள் நம் அன்புக்கும், உறவுக்கும் அப்புறம் நட்புக்கும் விதிக்கும் நிபந்தனை
என்னவென்றால்... அவர்களின் அநியாயத்தை, அக்கிரமத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்பதாக இருக்கிறது. முடியுமா மக்களே!
எந்த இருவருக்கும் இடையே சமாதானத்தை உருவாக்குவது மிகக் கடினமானதாக
இருக்கிறது. இருவரும் தங்கள் தரப்பே சரி என்கிறார்கள். ஒரு பேரழிவே இருவரையும் சமாதானப்படுத்துகிறது.
அறிவுரைகள் செத்து விடுகின்றன. அறிவுரைகள் மட்டும் சொல்லாதீங்க மக்களே!
அமைதியற்ற மனம்தான் கோபப்படுகிறது. ருத்ர தாண்டவமும் ஆடுகிறது.
இதை மாற்று, அதை மாற்று என்று அல்லாடுகிறது. அமைதியான மனம் அதையெல்லாம் கண்டு கொள்வதே
இல்லை. ஆகவே, அமைதியான மனம்தான் முக்கியம் மக்களே!
கட்டாயப்படுத்துவதற்கு எதுவும் இல்லை. வலியுறுத்த என்ன இருக்கிறது?
அநேக விசயங்கள் அதுவாக உணர்ந்து கொள்ளப்பட வேண்டியவைகள். உணர்த்துவதற்கு ஏதுவுமில்லாதவைகள்.
ஆகவே, அப்படியே விட்டு விடுங்கள் மக்களே!
மழை பெய்வதை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும், குடை வைத்துக்
கொள்வதை எந்த மழையும் வந்து தடுக்கப் போவதில்லை. எனவே, புரிந்து கொள்வீர்களாக மக்களே!
*****
No comments:
Post a Comment