"சிலை
கடத்தலில் ஈடுபட்டவர்கள்
கடவுள் நம்பிக்கை
மிகுந்தவர்களாம்"
நண்பர் ஒருவர்
பகிர்ந்து கொண்ட தகவல் இது.
"கடவுள்தான்
காப்பாத்தணும்
சிலைகளைக்
கடத்துபவர்களிடமிருந்து
கடவுள் சிலைகளை"
கவிதை எப்படி
என்றேன் நண்பரிடம்
"உங்களிடமிருந்து
கடவுள்தான்
காப்பாற்ற
வேண்டும் என்னை" என்றார்.
"கடவுளுக்குப்
பாரீன் போக ஆசை
அதனால் கூட
அவர் கடத்துவதற்கு
அனுமதித்து
இருக்கலாம் இல்லையா!"
என்ற புது
விளக்கத்தைக் கேட்ட பிறகு
தயவுசெய்து
சிலைகளைக் கடத்துவதற்குப் பதில்
இப்படி விளக்கம்
சொல்பவர்களை
வெளிநாட்டுக்குக்
கடத்துங்கள்
என்று சொல்லத்
தோன்றியது.
*****
No comments:
Post a Comment