23 Dec 2018

கடைசியில் ஒரு கேள்வி


கடைசியில் ஒரு கேள்வி
கடைசிச் சத்தியம் பொய்த்து விட்டது
கடைசி முத்தம் தீர்ந்து விட்டது
கடைசிக் குண்டு தங்கி விட்டது
கடைசி நம்பிக்கை ஏமாற்றி விட்டது
கடைசி உயிர் செத்து விட்டது
கடைசி இரவு என்னவாகியிருக்கும்
கடைசிக் பகல் கேட்டுக் கொண்டே இருக்கிறது
*****
வேறென்னச் செய்ய முடியும் உங்களால்?!
நீண்ட நேரம் பொழிந்து கொண்டிருக்கும்
பனிப்பொழிவைக் குறை சொல்லாதீர்கள்
நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு
போர்வை மூடி உறங்கிக் கொண்டிருக்கிறீர்களோ
அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது
வானம் பூமியை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது
அதுவாக விலகட்டும்
அதுவாக நகரட்டும்
விரைவாக விலகி நீங்கள் என்ன செய்து விடுவீர்கள்
பனிமூட்டத்தால் மூடியது போல
உறங்கிய உங்களை ஒரு போர்வை மூடியது போல
ஒரு புகை மூட்டத்தை
உங்கள் வாகனப் புகை கொண்டு மூடுவதைத் தவிர
வேறென்னச் செய்ய முடியும் உங்களால்
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...