19 Dec 2018

விழா மாற்றங்கள்


நட்புகளுக்காகவும், உறவுகளுக்காகவும் விழாக்களுக்குச் சென்றது ஒரு காலம். செல்பி எடுப்பதற்காக விழாக்களுக்குச் செல்வது ஒரு காலம்.
நண்பர்கள் வரவில்லையென்றால் விழாக்களுக்குப் போகாத அந்தக் காலம் நினைவில் வரும் அதே நேரத்தில், செல்போன் இல்லையென்றால் விழாக்களுக்குப் போகாத இந்தக் காலத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
தப்பித் தவறி அக்கறையோடு போகும் விழாக்களிலும்... உன்னிடம் இருக்கும் செல்போன் எப்படி? என்னிடம் இருக்கும் செல்போன் எப்படி? என்று விசாரித்து முடிப்பதற்குள் முக்கால்வாசி நேரம் ஸ்வாகா ஆகி விடுகிறது. முன்பெல்லாம் சந்திக்க முடியாத சொந்தக்காரர்களையும், ஊர்க்காரர்களையும் அப்படி விழுந்து விழுந்து விசாரிப்பதுண்டு. மீதி இருக்கின்ற கால்வாசி நேரத்தில் யாரைப் பற்றி விசாரிக்க முடிகிறது? அவசர அவசரமாக சாப்பிட்டு வெளியேறதான் வேண்டியிருக்கிறது.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...