எப்படிப்
பேச வேண்டும் என்று
பாடம்
எடுக்காதீர்கள்
எதை
எழுத வேண்டும் என்று
கட்டுபாடு
விதிக்காதீர்கள்
எதற்கெல்லாம்
போராடலாம் என்று
குறிப்பாணை
வெளியிடாதீர்கள்
எது
பிரச்சனையோ
அதைத்தான்
பேச முடியும்
அதைத்தான்
எழுத முடியும்
அதற்குத்தான்
போராட முடியும்
இயலுமானால்
பிரச்சனையை
இல்லாமல்
செய்ய முயற்சியுங்கள்
ஒருவருக்குள்
இருக்கும் சுயத்தை
இல்லாமல்
செய்ய முயற்சிக்காதீர்கள்
*****
No comments:
Post a Comment