அப்போது எல்லாம் வயக்காட்டுக்குப் போகும் பதையில் கல்லும் முள்ளும் குத்தும்.
இப்போது எல்லாம் க்ளாஸ் குத்துகிறது. விவசாய வேலைகள் ஒப்பந்தமயமாகி விட்டன. பேசியபடி
ஒப்பந்த பணத்தோடு தலைக்கு ஒரு குவார்ட்டர் வாங்கிக் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது.
அப்புறம் வயக்காட்டுக்குப் போகும் பாதையில் க்ளாஸ் குத்தாமல் கல்லும் முள்ளுமா குத்தும்.
கல்லும் முள்ளும் க்ளாசும் காலுக்கு மெத்தை என்று போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
இல்லையென்றால் வயக்காட்டில் செருப்பு போட்டு நடக்க மாட்டேன் என்று பிடிவாம் பிடிக்காமல்
செருப்பைப் போட்டுக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். ஒரு க்ளாஸ் குத்திய
புண் ஆற இரண்டு வாரங்களுக்கு மேல் பிடிக்கிறது.
*****
No comments:
Post a Comment