ஜோராகக் கை தட்டுபவர்கள்
எங்கள்
குட்டைகளின் மேல்
பன்னாட்டு
குளிர்பானக் கடைகள் இருக்கின்றன
எங்களின்
குளங்களின் மேல்
உல்லாச
விடுதிகள் இருக்கின்றன
ஏரிகளின்
மேல் எப்போது அலைந்து கொண்டிருக்கும்
வாகனங்களின்
நிலையங்கள் இருக்கின்றன
ஆறுகளெங்கும்
கழிவு நீர் வடிகால் வாரியங்களின்
குழாய்கள்
பதிக்கப்பட்டு விட்டன
எப்போதோ
ஞாபகங்கள் வெட்டப்பட்ட
நாங்கள்
ஏன் எங்களின் நீர்நிலைகளைப் பற்றி
நினைக்கப்
போகிறோம்
நீங்கள்
உங்களின் நதிநீர் இணைப்பைப் பற்றிப் பேசுங்கள்
விரல்களையும்
வெட்கத்தையும் உதிர்த்து விட்ட
நாங்கள்
கை தட்டுகிறோம்
*****
No comments:
Post a Comment