ஒரு
டீக்கடைக்காரர் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக டீ குடித்த கடன்களை எல்லாம் ரத்து
செய்யும் போது, வங்கிகள் ஏன் குறைந்தபட்சம் விவசாயக் கடன்களுக்கு அதைச் செய்ய முடியாது?
கார்ப்ரேட் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கே வங்கிகளுக்கு நேரம் போதாத காரணத்தால்தான்
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.
டெல்லியில்
இருந்து 124 பேரை வைத்து ஒரு கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களை ஏமாற்றிய செய்தியைப்
படித்த போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. எப்படி என்கிறீர்களா? அமெரிக்கர்கள் மரபணு
மாற்றம், அணு ஆயுதங்கள், வேண்டாதக் கழிவுகள், காலவதியாகிவிட்ட தொழில்நுட்பம் என்று
வளரும் நாடுகளுக்கு வழங்கி ஏமாற்றுவதை நினைக்கும் போது அமெரிக்கர்களை ஏமாற்றிய தலைநகர்வாழ்
இந்தியர்களை நினைத்த போது ஆச்சரியமாகத்தானே இருக்க முடியும்.
இன்றிலிருந்து
வங்கிச் சேவைகள் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். எங்கள் கிராமத்துக்கு எல்லாம் எப்போது
வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில்தான் இருக்கின்றன. அதனால் எங்களுக்கு எல்லாம்
வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்ட மாதிரியே தெரியவில்லை.
*****
No comments:
Post a Comment