தயாரிப்பாளர்
சங்கத்துக்குப் போடப்பட்ட பூட்டுதான் இப்போதைய ஹாட் டாபிக். இந்தப் பூட்டைப் பற்றி
என்ன நினைக்கிறீர்கள் என்று ஆளாளுக்குக் கேட்டதில், 'கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக்
கெட்டிகாரன்' என்றேன்.
அது பூட்டு
என்பதற்கான விடுகதை என்பதை புரிந்து கொள்ளாத நண்பர் ஒருவர், காவலர்கள் போடுவது காக்கிச்
சட்டைதானே, நீங்கள் என்ன கருப்புச் சட்டை என்கிறீர்களே என்றார்.
தவறு என்னுடையதுதான்
நண்பரே என்று அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.
'பூட்டிய
இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது, சிறுத்தையே வெளியில் வா!' என்ற பாவேந்தர்
பாரதிதாசனாரின் வரிகளை முழங்கியபடி போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்க ஆரம்பித்தேன்.
கனவில் கலர்
கலராகப் பூட்டுகள் தொங்கின.
துருபிடித்த
கருப்புச் சாவிகள் ஒரே மாதிரியாக பக்கத்திலே தொங்கின.
எந்தக் கலர்
பூட்டுக்கு எந்தத் துரு பிடித்த சாவியோ? கண்டுபிடிக்க வேண்டும்.
*****
No comments:
Post a Comment