21 Dec 2018

மற்றுமொரு பேரிடர்



இன்றிலிருந்து ஐந்து நாளுக்கு வங்கிகள் செயல்பட வாய்ப்பில்லை. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பத்திரிகைகளும், வாட்ஸ்அப்புகளும் ஒரு பேரிடர் ரேஞ்சுக்கு பயம் காட்டுகிறார்கள்.
இந்த இயற்கைப் பேரிடரை மன்னிக்கவும் செயற்கை பேரிடரை நாம் எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ?
ஏற்கனவே நாற்பதாயிரம் எடுக்கலாம் என்ற அளவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இருபதாயிரம் என்று குறைத்து விட்டது. அதிலும் மாதத்துக்கு எத்தனை முறை பணம் எடுக்கலாம் என்ற கட்டுபாடுகளைக் கனஜோராக கடைபிடிக்கிறார்கள்.
மாதத்தின் முதல் பத்து நாட்கள் வரை ஒரு ஏ.டி.எம்.மில் புகுந்து வெற்றிகரமாகப் பணம் எடுத்து வருவதை ஒரு டிவிட்டர் சவாலாகவே விடலாம். குறைந்தபட்சம் ஐந்தாறு ஏ.டி.எம்.களில் ஏறி இறங்க வேண்டும். நல்ல அலைச்சல் அனுபவம் அது. நடந்தே செல்பவர்களுக்கு வாக்கிங் அனுபவம்.
இதுக்குதான் சார்! மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங்னு மாறணும் என்பவர்களும் இருக்கிறார்கள்.
கஜா புயலில் பாதிக்கப்பட்டு பல நாட்கள், பல வாரங்கள் மின்சாரம் இல்லாமல் கிடந்த போது எந்த மொபைல் பேங், நெட் பேங்கிங் உதவியது? கையில், பையில் சேமிப்பில் இருந்த பணம்தான் அப்போது உதவியது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆதார் அட்டையில் பிறந்த நாள், பிறந்த மாதம் இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டுமே இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி வங்கிகள் வாடிக்கையாளரின் கணக்கீட்டை முடக்கி வைத்திருக்கும் நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத கிராம மக்கள் ஆதார் அட்டையில் எப்படி பிறந்த நாள், மாதத்தைச் சேர்ப்பது என்று அலையாய் அலைந்து கொண்டிருப்பது தனி அலைச்சல் வகையில் சேரும்.
ஒரு தேசத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் அதைப் பயன்படுத்தாதவர்களுக்கும், பயன்படுத்த விரும்பாதவர்களுக்கும் இருக்க வேண்டும்தானே! அதனால் என்ன குறைந்து விடப் போகிறது?
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...