அமைதியாக
இரு. சூழ்நிலைகள் மாறுகிறதே என்று புதிதாக எதையும் முயற்சிக்க வேண்டாம். உன்னால் எது
இயலுமோ அதை மட்டும் செய்து கொண்டு மெளனமாக இரு. அமைதிக்கு எதிராக எதையும் செய்ய முடியாது
என்பதால், மெளனமாக இருப்பதற்கு எதிராக பேசிச் சண்டையிட முடியாது என்பதால் இறுதியில்
அதுவே வெற்றி பெறும்.
சுற்றியிருப்பவர்கள் பதற்றப்படுத்துவார்கள்.
அதனால் என்ன? அவர்கள் பதற்றமாக இருக்கிறார்கள். அதனால் பதற்றப்படுத்துகிறார்கள். நீ
நிதானமாக இருக்கிறாய் என்றால் அவர்கள் பதற்றப்படுத்துவதற்கு ஏற்ப ஆடத் தேவையில்லை.
மற்றவர்களுக்காக ஆடாதவர் எவரோ, தன் சுய நடனத்தை விரும்புகிறவர் எவரோ அவரை எவரும்
ஆட்டுவிக்க முடியாது.
*****
No comments:
Post a Comment