இருளைக்
கலைத்துப் போட்டதற்காக
பகல்
மேல் இருளுக்குக் கோபமோ
பகலை
மூடிப் போனதால்
இருள்
மேல் பகலுக்கு வருத்தமோ
இல்லாது
நாள்தோறும் வந்து போகின்றன
புதிய
புதிய பகல்கள் இரவுகள்
முந்தா
நாள் இரவு நேற்றோடு செத்து
இன்றைய
பகல் நாளை பிணமாகி
ஒவ்வொரு
நாளும் புதிய காலண்டர் தாள்
ஒவ்வொரு
நாளுக்கும் நாட்குறிப்பின் புதிய பக்கம்
ஒரே
மாதிரியாகத்தான் ஓடுகின்றது
பழசானதைத்
திரும்பிப் பார்க்காமல் ஓடும் காலம்
கடிகார
முள்ளேறி சுழன்று கொண்டிருப்போர்
பழசானக்
காலத்தைத் திரும்பிப் பார்த்து
புதியதைச்
சமைப்பதாகக் கூறும் போது
நமுட்டுச்
சிரிப்பு சிரிக்கிறது
செரிமானக்
கோளாறில்லாத காலம்
*****
No comments:
Post a Comment