21 Dec 2018

உலகில் இல்லாதது


உலகில் எது இல்லாத மனிதர்கள் அதிகம்? என்று கேட்டார் நண்பர்.
உணவா?
உடையா?
உறைவிடமா?
எது இல்லாத மனிதர்கள் உலகில் அதிகம்?
யோசித்துப் பார்த்தால் போதும் என்ற மனம் இல்லாத மனிதர்கள்தான் அதிகம் என்பது போலத் தோன்றுகிறது.
அது எப்படி? என்ற கேட்ட நண்பருக்கு, இந்தப் பதிலே போதும் என்ற மனம் உங்களுக்கே இல்லையே என்றேன்.
ஆமாம், போதும் என்ற மனம் இருந்து விட்டால் வாழ்க்கையில் இல்லாதது ஏது?
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...