எல்லா செயல்களையும்
நம் மனசுக்காகத்தான் செய்கிறோம்.
கோபத்தைத்
தணிப்பதாக நினைத்துக் கொண்டு இன்னும் அதிகமாகக் கோபப்படுகிறோம்.
எதிரியைப்
பயமுறுத்தினால்தான் அடங்குவார் என நினைத்துக் கொண்டு அதி பயங்கரமான வன்முறையைக் கையில்
எடுக்கிறோம்.
உருட்டி மிரட்டினால்
காரியம் ஆகும் என்று நினைத்துக் கொண்டு ஆகின்ற காரியத்தையும் ஆகாமல் செய்து விடுகிறோம்.
மலிவாக வாங்குவதாக
நினைத்துக் கொண்டு தேவையே இல்லாத பொருட்களை குவியல் குவியலாக வாங்கி வைத்துக் கொள்கிறோம்.
ஒருவரை நேர்மையாக விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு
சம்பந்தமே இல்லாதவர்களைப் பகைவர்களாக உருவாக்கிக் கொள்கிறோம்.
உதவினால்
நண்பர்களாக இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு பின்விளைவுகளைப் பரிசீலிக்காமல்
ஆபத்தில் சிக்கி மனஉளைச்சல்களுக்கு ஆளாகிறோம்.
பாசமாக இருக்க
வேண்டும் என்று நினைத்து தவறு செய்யும் இடங்களைக் கண்டிக்காமல் விடுத்து தம்முடைய தலைக்கு
மேலே தாமே கத்தியைத் தொடங்க விட்டுக் கொள்கிறோம்.
இது குறித்துக்
கேட்டால்...
இப்படியெல்லாம்
இருந்தால்தான் மனசு கம்முன்னு இருக்கு, இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது மாதிரி
இருக்கு என்று சப்பைக் கட்டு கட்டுகிறோம். சப்பைக் கட்டு கட்டி விட்டு பின் யாருக்கும்
தெரியாமல் மனதைத் திட்டு அழுகின்ற அழுகை இருக்கிறதே... வார்த்தைகளால் சொல்ல முடியுமா
அதை!
இதிலிருந்து
தப்பிப்பதற்கு வழியேதும் இருக்கிறதா என்கிறீர்களா?
இல்லாமல்
இருக்குமா?
கன்ப்யூசியஸ்
சொல்கிறார்,
எது வசதியானதோ
அதைச் செய்யாதே. எது சரியானதோ அதைச் செய்.
வேறு வழிகள்
இன்னும் இருக்கிறதா என்றால்... இருக்கிறது! தேவைப்படுபவர்கள் எழுதுங்கள்!
*****
No comments:
Post a Comment