நஞ்சை
வைத்து உவகையோடு உபசரிக்கும்
சொந்தக்காரன்
பொறாமையை
நெஞ்சில் வைத்து சிரித்துப் பழகும்
நண்பன்
கவிழ்த்து
விட நேரம் பார்த்து கண்ணியமாகப் பேசும்
ஊர்க்காரன்
முடிந்ததாக
நினைத்துக் கொண்டாலும்
நீதி
இலக்கியங்களின் காலம்
முடிந்து
விடவில்லை
நீதியும்
மடிந்து விடவில்லை
யாரென்றே
தெரியாத எவனோ ஒருவன் வந்து
காப்பாற்றி
விட்டுப் போகையில்
ஒவ்வொரு
வினைக்கும்
ஓர்
எதிர்வினை என்பது போன்றில்லை நீதிகள்
எப்போதோ
ஒருமுறை என்பது போல
முற்பகல்
செய்தது பிற்பகல் விளையாமல்
நான்கு
பகல்கள் நானூறு பகல்கள் கழித்தும் விளையலாம்
விளையாமல்
போன வினைகள்
அந்திமக்
காலத்தின் கொல்லாமல் கொல்லும்
அச்சக்
கணக்கில் சேர்பவைகள்
*****
No comments:
Post a Comment