26 Dec 2018

ஈ.வெ.ரா. இருந்தால் என்ன செய்திருப்பார்?


"ஒரு சிகரெட் பாஸ்
ஒரு கட்டிங் ஜி
கொஞ்சம் அப்படி இப்படி இருங்க தல
வாழ்க்கையை அனுபவிக்கணும்ங்க
ஒரு முறைத்தான் பிறக்கப் போறீங்க
இன்னொரு பிறவி எல்லாம் நோ சான்ஸ்"
நம் நாட்டில் இப்படித்தான் வாழ்க்கையை அனுபவிக்கச் சொல்கிறார்கள். இது சரி என்றால் இதையே ஏன் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று கேட்டால் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள் மக்கா.
இதில் மது எத்தனைப் பேரை அடிமைகளாக்கி வைத்து இருக்கிறது தெரியுமா? அடிமைச் சமூகம் என வரலாற்றில் படித்திருப்போமோ! அந்த வரலாறு திரும்பிக் கொண்டிருக்கிறது.
மது எத்தனைப் பேரைக் கொலைகாரர்களாக்கி இருக்கிறது தெரியுமா? முன்பெல்லாம் யாரோ ஒருவரை எதிரி என நினைத்து கொன்ற நிலைகள் மாறி இன்று குடும்பத்தில் இருப்பவர்களையே எதிரி போல் கொலை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மது.
மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்று அதிலேயே எழுதி வைத்து இருக்கிறார்கள். அப்புறம் ஏன் கேடு தருவதை விற்பதற்கென்றே ஒரு நிர்வாகத்தை உருவாக்குகிறார்கள்? அதை அகற்றுங்கள் என்று போராடினால் போராடுபவர்களை ஏன் அகற்றுகிறார்கள்?
கள்ளுக்கடை மறியலுக்காக தன் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டி வீசிய ஈ.வெ.ரா. மண்ணில் மது விற்பனையில்தான் நிர்வாகமே நடைபெறுவதாகச் சொல்லப்படுவது உண்மையானால்... ஈ.வெ.ரா. இருந்தால் என்ன செய்திருப்பார்?
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...