27 Dec 2018

நிஜமான வெற்றி


நிஜமான வெற்றி
வெற்றித் தோல்விகளை மட்டும் வைத்து மதிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? ஒரு காலத்தில் வெற்றியாகக் கருதப்பட்டவைகள் இன்னொரு காலத்தில் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் தோல்வியாகக் கருதப்பட்டவைகள் இன்னொரு காலத்தில் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் கொல்வது வீரமாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். இப்போது காப்பதுதானே வீரமாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் மன்னராட்சியே சிறந்ததாகக் கருதப்பட்டிருக்கலாம். இப்போது மக்களாட்சிதானே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
வெற்றி, தோல்வி என்ற கருத்தாக்கங்கள் காலத்துக்கு ஏற்ப மாறுகின்றன. ஆட்களுக்கு எற்பவும் மாறுகின்றன.
சாமனியர்களுக்கு 'பெறுவது' வெற்றியாக இருந்தால், துறவிக்கு 'இழப்பது' வெற்றியாக இருக்கிறது.
பொதுவானப் பார்வையில் பார்க்கும் போது பணத்தைச் சம்பாதித்தால் அது வெற்றி. இல்லையென்றால் தோல்வி என்பதாகத்தான் பார்க்கப்படுகிறது.
பணநிறைவு என்பது வெற்றியாகப் பார்க்கப்பட்டு, பணம் நிறைந்த பின் மனநிறைவு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
வெற்றி, தோல்வி என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஒரு காலத்தில் வெற்றி என்பது தேவையாக இருக்கிறது. ஒரு காலத்தில் அதுவே தொல்லையாகவும் இருக்கிறது.
நிஜமான வெற்றி என்று எதுவும் இல்லையா என்று கேட்டால், இருக்கிறது. வெற்றி என்றால் என்னவென்று புரிந்து கொள்வதுதான் நிஜமான வெற்றி.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...