மகோன்னதமானவர்கள்
'மனவிரைவு'
என்பது சமகாலப் பிரச்சனைகளுள் ஒன்று. அது அவசரப்படுத்துகிறது. அந்த அவசரம் சில நேரங்களில்
நிலைதடுமாறவும் செய்து விடுகிறது.
இலக்குகளை
உடனடியாக முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் பழக்கமாகி மனவிரைவுக்கு தம்மையும் அறியாமல்
அதற்கு நாம் ஆட்பட நேரிடுகிறது.
இலக்குகளில்
ஆரம்பிக்கும் மனவிரைவு காலப்போக்கில் வாழ்வில் ஒவ்வொரு கூறுகளிலும் குறுக்கிட ஆரம்பிக்கிறது.
மனவிரைவின்
போக்கிலேயே எல்லா செயல்களும் நடந்து முடிந்து விட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது.
வாழ்க்கையில் அப்படியா எல்லாமும் நடக்கும்?
மனவிரைக்கு
ஏற்ப செயல்கள் நடக்காத போது அது தரும் ஏமாற்றம் மன இறுக்கமாக உருபெறும். விரைவாகச்
செயலாற்றும் ஒருவர் இப்படி காலதாமதம் செய்கிறாரே என்று சுற்றியுள்ளவர்கள் சுட்டிக்
காட்டும் போது அல்லது மேலிடத்திலிருந்து நிர்பந்தம் தரப்படும் போது அதுவே மனஉளைச்சலாக
மாற்றம் பெறும்.
மனஇறுக்கமும்,
மனஉளைச்சலும் நிதானமான ஒரு மனிதரையும் கோபப்படச் செய்யும். கொஞ்சம் கொஞ்சமாக பெருகும்
கோபம் சுற்றியுள்ளவர்கள் மேல் எரிந்து விழச் செய்யும். அக்கறையாகப் பேசுபவர்களைக்
கூட எதிரிகளைப் போல பார்க்கச் செய்யும்.
வாகனங்களில்
எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்ற கட்டுபாட்டை உருவாக்கிக் கொள்வதைப் போன்றே
மனதின் வேகமும் என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
அபரிமிதமான மனவிரைவு அதிவேகத்தில் செல்லும் வாகனத்தைப் போன்றதுதான். என்ன வேண்டுமானாலும்
நிகழலாம்.
நமது இயல்பின்
வேகத்தோடு மனதின் வேகமும் ஒன்றிணைந்து விட்டால் நாம் மனரீதியானப் பிரச்சனைகள் அற்றவர்களாக
ஆகி விடுவோம் என்பது மனதின் சூட்சமங்களுள் ஒன்று.
மனதின் வேகத்தை
தங்களுக்கு ஏற்றாற் போல் அமைத்துக் கொள்பவர்கள் மகோன்னதமானவர்கள்.
*****
No comments:
Post a Comment