20 Dec 2018

புதிய கன்னிமார்கள்


புதிய கன்னிமார்கள்
காலந்தோறும் கன்னி கிழியாதவர்கள்
திரையில் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்
திரைக்கு முன்னே சுயமைதுனம் செய்து கொள்பவர்கள்
ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்
மாநிலம் மாநிலமாக அலைந்து திரிந்து
பிடித்துக் கொண்டு வருவதாகப்
பேசிக் கொள்கிறார்கள் கலைச் சேவை புரிபவர்கள்
சொற்களில் போதையேற்ற
கவர்ச்சி கன்னி என்று பெயர் சூட்டிக் மகிழ்கிறார்கள்
கண்கள் இறுகக் கட்டப்பட்டு விட்டதால்
நீதி தேவதைக்குத் தெரியாத
அவிழ்ந்து விழும் ஆட்டங்களில்
திரையின் பின் இருக்கும் மன்மதக் கண்ணன்கள்
பிம்பத்தைப் புணர்பவர்கள்
பெருமகிழ்வு எய்துகிறார்கள்
புணர்ந்த பிம்பத்துக்கே
கோயில் கட்டுகிறார்கள்
ஏழு கன்னிமார்களும் எழுந்து போகிறார்கள்
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...