6 Dec 2018

கடைசி ஆறுதல்


கடைசி ஆறுதல்
உனக்கென எழுதிய கடிதங்களைப்
பத்திரமாக வைத்துக் கொண்டு
அவ்வபோது கரணம் தப்பும்
மரணப் பொழுதுகளில் எல்லாம்
சிரித்துக் கொள்கிறாய்
எப்போதொ தட்டில் விழும்
சில்லரையை எடுத்துப் பார்த்து
ஏளனமாய்ச் சிரிப்பவனின்
கேவலொலி கேட்கிறதெனக்கு
வன்மத்தைச் சுமந்த ஒருவன்
கணவ(ர்)க் கடமையென
வன்கொடுமையில் ஆழ்த்த
சிகரெட்டின் வடுக்களை
இல்லறத்தின் சுவடெனச் சுமந்து
எட்டாவது கருக்கலைப்பொன்றில்
எதேச்சையாக எப்படியோ நீ பிழைத்து
சீக்கு வந்து சீழ் வடிந்து கிடப்பவனின்
துர்நாற்ற துர்கவிச்சையை இச்சையெனப்
பணிவிடை அணிந்த கசங்கிக் கிழிந்தச் சேலையின்
உன் சோகம் ததும்பிய வாழ்வு
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
எனக்கான ஒரே ஆறுதல்
நீ சிரித்துக் கொள்வதற்கான
சில கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன்
என்பதுதான்
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...