ஆழ்மனதின் அச்சங்கள்தான் பல நேரங்களில் பேச்சாக, செயலாக வெளிப்படுகிறது.
நாம் இப்படி பேச நினைக்கவில்லையே, இப்படி செய்ய நினைக்கவில்லையே என்று நினைத்தாலும்
அப்படிப் பேசியிருக்கலாம், செயல்பட்டிருக்கலாம். அதற்குக் காரணம் ஆழ்மனதின் அச்சம்தான்.
ஆக மாற்றம் என்பதை பல நேரங்களில் உள்ளிலிருந்து கொண்டு வர வேண்டும்
என்பதற்குக் காரணம் இதுதான்.
உள்ளிலிருந்து துவங்கும் மாற்றம் வெளியில் மகத்தான் மாற்றங்களை
உருவாக்கும்.
மிக முக்கியமாக ஒவ்வொருவரும் தங்கள் ஆழ்மனதின் அச்சங்களைப்
புரிந்து கொள்வதிலிருந்து அவர்களுக்கான மாற்றங்கள் துவங்குகின்றன.
*****
No comments:
Post a Comment