27 Dec 2018

இன்னும் புதிதாய் வேண்டும் என்பவர்களுக்கு...


இன்னும் புதிதாய் வேண்டும் என்பவர்களுக்கு...
புதிதாகப் பேச என்ன இருக்கிறது
எழுத எதுவும் இருப்பதாக தெரிகிறதா
பேசித் தேய்ந்த எழுதி நெளிந்த சொற்களில்
வழமையான புன்னகையை எதிர்கொள்கையில்
உன்னைக் கொன்று தீர்த்து விடலாமா
சதுர நிலா முக்கோணச் சூரியன்
நாற்கர வானவில் சரிவகப் பூமி
சாய்ந்த சதுரம் போன்ற நட்சத்திரம்
எதாவது புதிதாகத்தான் செய்ய வேண்டும்
இட்டிலியைப் பரந்த மனம் கொண்ட
தோசை போல ஊற்று
ஊறுகாயைச் சோறு போலக் கொட்டி
சோற்றை ஊறுகாய் போல வைத்து தின்று பார்
விடியலில் எழுந்து புதிததாய் பிறந்திருக்கிறாயா என
சோதித்துப் பார்
இல்லையென்றால் ஒன்றிரண்டு நட்சத்திரங்களை
எடுத்து விழுங்கி விட்டு
நெஞ்சடைத்து போய் நட்சத்திரமாகி விடு
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...