26 Dec 2018

அட அப்பரெண்டிஸ்களா!


நம்ம பணத்தை நாம எடுக்க பேங்க்ல வரிசை கட்டி நின்னோம் பாருங்க!
அதுவும் கருப்புப் பணத்தை ஒழிக்கிறதுக்குன்னு நின்னோம் பாருங்க!
அதுக்கு அப்புறம் கட்டுகட்டா ரெண்டாயிரம் நோட்டை அவனவனும் அடிச்சாம் பாருங்க!
நமக்கு எல்லாம் ஊழலை ஒழிக்கணுங்றதுல ரொம்ப ஆசைன்னு எல்லா அரசியல்வாதிங்களுக்கும் தெரியும். அட கொய்யாலே! அதைத்தான் பாஸூ ஆயுதமா பயன்படுத்துறாங்க, 'ஊழலை ஒழிக்கப் போறோம்னு'
அட அப்பரெண்டிஸ்களா! அந்த ஊழலைப் பண்ணுறதே அவிய்ங்தானே! ஊழலை ஒழிக்கிறோம்னு ஆட்சிக்கு வந்து, சொன்னபடியே மற்றவங்க ஊழல் பண்றதை ஒழிச்சு கட்டி, அவிய்ங்க மட்டும் பண்ணிகிட்டு இருக்கிறாங்க தலைவாக்களே!
இன்னும் நிறைய சொல்லுவாங்க பொது ஜனங்களே!
வேலை வாய்ப்பைப் பெருக்குவோம்னு சொல்லுவாங்க. அவங்க குடும்பம், குட்டி, சொந்தக்காரங்களுக்கு மட்டும் பெருக்குவாங்க!
நாட்டையே மாற்றிக் காட்டுவோம்னு சொல்லுவாங்க! அவங்க மட்டும் பணம் சம்பாதிக்கிற மாதிரி நாட்டையே மாற்றிக் காட்டுவாங்க!
ஊழலை ஒழிச்சா...
கருப்புப் பணத்தை அழிச்சா...
நாட்டையே மாத்துனா...
வேலை வாய்ப்புகளைப் பெருக்குனா...
அப்புறம் அரசியல் பண்ண முடியாதுன்னு அவங்களுக்கு நல்லா தெரியும். அது மட்டுமில்ல மக்கா! இதையெல்லாம் சொல்லித்தான் அரசியல் பண்ண முடியும்னு அவங்களுக்குத் தெரியும்! ஆகவே அதாகப்பட்டது, என்னருமை மக்கா! சொல்லுவாங்க! செய்ய மாட்டாங்க! நீங்க ரொம்ப கனவு காணக் கூடாது! கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்னு ஒரு பாட்டே இருக்குதே மக்கா!
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...